கார் மீது கல்லை தூக்கி போட்ட 2 போலீஸ்காரர்கள் கைது


கார் மீது கல்லை தூக்கி போட்ட 2 போலீஸ்காரர்கள் கைது
x

கார் மீது கல்லை தூக்கி போட்ட 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மேலூர்,

கார் மீது கல்லை தூக்கி போட்ட 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ்காரர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன்கள் ஜெகதீசன்(வயது 34), தினேஷ்(33).

இதில் ஜெகதீசன் சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

இவருடைய தம்பி தினேஷ், மதுரை அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

இவர்களின் குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த வடிவேலன்(40) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் அரிட்டாபட்டி ரோட்டில் காரில் வடிவேலன் வந்து கொண்டிருந்தார். ஆண்டிக்கோவில் அருகே வந்தபோது, ஒரு கும்பல் அந்த காரை திடீரென வழிமறித்தது. பின்னர் வடிவேலனிடம் தகராறு செய்து, காரின் மீது கல்லை தூக்கிப்போட்டது.

கைது

இதுகுறித்து வடிவேலன் மேலூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் ஜெகதீசன், தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story