மினி லாரி மோதி 2 போலீஸ்காரர்கள் படுகாயம்
கச்சிராயப்பாளையம் அருகே மினி லாரி மோதி 2 போலீஸ்காரர்கள் படுகாயம்
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய். கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குதிரைச்சந்தல் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் கள்ளக்குறிச்சி உட்கோட்ட உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு செல்வராஜ் மற்றொரு இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
நல்லாத்தூர் பெரியாயி கோவில் அருகே வந்தபோது பின்னால் வந்த மினி லாரி அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜய், செல்வராஜ் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மினி லாரி டிரைவர் ஏமப்பேர் கிராமம் கோவிந்தராஜ் மகன் நவீன் என்பவர் மீது கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.