மூதாட்டியிடம் 2½ பவுன் நகை பறிப்பு
திருவாடானை தாலுகாவில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா, டி.நாகனி ஊராட்சி அலங்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி முத்து பெருமாள் (வயது 80). இவர் தனது மகன் பூமயில் பராமரிப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை பூமயில் டீக்கடைக்கு சென்று விட்டார்.. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்து பெருமாள் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முத்து பெருமாள் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story