2 மலைப்பாம்புகள் பிடிபட்டன
2 மலைப்பாம்புகள் பிடிபட்டன.
அன்னவாசல் அருகே தாண்றீஸ்வரம் மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவரது வீட்டிற்கு அருகில் மலைப்பாம்பு ஒன்று கோழியை முழுங்கிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 8 அடிநீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் அடைத்தார். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் மலைப்பாம்பை ஒப்படைத்தார். இதேபோல் இலுப்பூர் அருகே மாங்காளப்பட்டியை சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டின் அருகில் மலைப்பாம்பு ஒன்று இருந்துகொண்டு அச்சுருத்துவதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 10 அடிநீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இதையடுத்து 2 மலைப்பாம்புகளையும் தீயணைப்பு துறையினர் வனத்துறைனரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் நார்த்தாமலை வனப்பகுதியில் 2 மலைப்பாம்புகளையும் கொண்டு விட்டனர்.