2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்


2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
x

2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே உள்ள ராதாமங்கலம் கடுவையாற்றின் வடக்கு கரையில் ஒருவருக்குச் சொந்தமான மூங்கில் தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று பகல் 1மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீப்பொறி பறந்து ராதாமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த‌ கோபாலன் (வயது 37), மனோகரன், (62) ஆகியோர் கூரை வீடுகளின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பின்னர் வீடுகள் முழுவதும் தீப்பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அருகில் உள்ள பிரேமா என்பவரின் கூரை வீட்டுக்கும் தீப்பரவியது. உடனே தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கோபாலன், மனோகரனின் வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த வீடுகளில் இருந்த பவுன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் கட்டில், பீரோ, துணி மணிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்த நாகை மாலி எம்.எல்.ஏ, கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், தாசில்தார் ரமேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story