சீரான போக்குவரத்துக்கு சுங்கத்தில் 2 ரவுண்டானா
கோவை - திருச்சி ரோடு சுங்கத்தில் சீரான போக்குவரத்து நடைபெற ரூ.90 லட்சத்தில் புதிதாக 2 ரவுண்டானா அமைக்கப்பட உள்ள
கோவை - திருச்சி ரோடு சுங்கத்தில் சீரான போக்குவரத்து நடைபெற ரூ.90 லட்சத்தில் புதிதாக 2 ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.
சுங்கம் பகுதி
கோவை - திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மேம்பாலம் திறக்கப் பட்டு போக்குவரத்து தொடங்கியதும் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்தனர்.
எனவே மேம்பாலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைப்பது உள்பட தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
அதன்பிறகு மேம்பாலத்தில் விபத்து இன்றி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
போலீசார் கண்காணிப்பு
இது போல் மேம்பாலத்துக்கு கீழ் திருச்சி ரோட்டிலும் கார், வேன் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களும் அதிக எண்ணிக்கை யில் சென்று வருகின்றன.
இதனால் அங்கு போக்குவரத்து நெரி சல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் சுங்கம் சந்திப்பில் புலியகுளம் ரோடு, உக்கடம் ரோடு, நிர்மலா கல்லூரி ரோடு மற்றும் திருச்சி ரோட்டின் இருபுறத்தி லும் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கின்றன.
எனவே அந்த சந்திப்பில் கவனமாக செல்லா விட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2 ரவுண்டானா
அதை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் பிரிந்து செல்ல வசதி யாக கற்களை அடுக்கி தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் சில வாகன ஓட்டுனர்கள் அவசரமாக வரும் போது விபத்து மற்றும் தகராறு ஏற்படுகிறது.
எனவே அங்கு எப்போதும் போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சுங்கம் சந்திப்பில் 2 ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-
விபத்து தவிர்க்கப்படும்
கோவை - திருச்சி ரோடு சுங்கத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாமல் சீராக போக்குவரத்து நடைபெற 2 ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.
டிராபிக் ஐலேண்ட் என்ற பெயரில் ரூ.90 லட்சத்தில் ரவுண்டானா அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கும்.
இதன் மூலம் நான்கு புறத்திலும் உள்ள ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள் நின்று காத்திருக்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கலாம். இதனால் வாகனங் கள் விரைவாக செல்ல முடியும். மேலும் விபத்து ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி கோவை லாலி ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றத்தையும், சிந்தாமணி பகுதியில் போக்குவரத்து நடைபெறு வதையும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.