பள்ளிபாளையத்தில்குட்கா விற்ற 2 கடைக்காரர்களுக்கு அபராதம்


பள்ளிபாளையத்தில்குட்கா விற்ற 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பகுதிகளில் பள்ளி அருகே உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திருச்செங்கோடு மற்றும் ்பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அதிகாரி சிங்காரவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதன் சந்தைபேட்டை பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் ஹான்ஸ், குட்கா உள்பட தடை செய்யப்பட்ட ெபாருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு கடைக்காரர்களுக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story