வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
ஜோலார்பேட்டையில் வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன
ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது வீட்டிற்கு நுழைந்த பாம்பு பார்த்ததும் அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டிற்குள் இருந்த 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.
இதேபோல் ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் பகுதியில் வசித்து வரும் ரத்தினம் என்பவரின் வீட்டிற்குள் திடிரென பாம்பு நுழைந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடித்தனர்.
பிடிப்பட்ட 2 பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.