குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 2 தனிப்படை


குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 2 தனிப்படை
x

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 2 தனிப்படை

கோயம்புத்தூர்

கோவை

கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-கோவை நகரில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க இரவு 8 மணி முதல் 11 மணி வரை கோவையில் 2 தனிப்படையினர் தீவிர சோதனை நடத்துவார்கள்.

தினமும் குறைந்தபட்சம் 15-க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்வார்கள். மேம்பால பணிகள் காரணமாக அவினாசி ரோட்டில் கேமராக்கள் முழுமையாக செயல்படவில்லை. அங்கிருந்து எடுக்கப்பட்ட கேமராக் களை வேறு பகுதிகளில் பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story