குமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்ட 2 தாசில்தார்கள்


குமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்ட 2 தாசில்தார்கள்
x

குமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் 2 தாசில்தார்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். 3 பேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் 2 தாசில்தார்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். 3 பேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதவியிறக்கம்

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளின்படி திருத்தப்பட்ட துணை தாசில்தார் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு 2008 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கு திருத்திய தாசில்தார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திருத்திய தாசில்தார் பட்டியலில் இடம் பெறாத தாசில்தார்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டு துணை தாசில்தார்களாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 2 தாசில்தார்கள் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் விளவங்கோடு தாசில்தாரராக இருந்த பத்மகுமார், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். நாகர்கோவில் ரெயில்வே நிலமெடுப்பு அலகு-1 தனி தாசில்தாரதாக இருந்த சிவகலா, கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பதவி உயர்வு

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றி வந்த சுபா பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் ரெயில்வே நிலமெடுப்பு அலகு-1 தனி தாசில்தாரராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் நாகர்கோவில் கேபிள் டி.வி. தனி தாசில்தார் குமாரவேல் விளவங்கோடு தாசில்தாராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி தாசில்தார் (கல்வி உதவித்தொகை) கந்தசாமி, கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story