2 வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு ரூ.70 ஆயிரம் வரி வசூலிப்பு
2 வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு ரூ.70 ஆயிரம் வரி வசூலிக்கப்படுகிறது.
திருச்சி
திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் ஸ்ரீரங்கம் ஒய்ரோடு அருகே ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த 2 பஸ்களும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்ததுஉடனே 2 ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஒரு பஸ்சுக்கு ரூ.34 ஆயிரத்து 754 வீதம் 2 பஸ்களுக்கு ரூ.69 ஆயிரத்து 508-ஐ செலுத்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதனையடுத்து அந்த வரித்தொகையை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் செலுத்தினர். அதன் பின் அந்த பஸ்கள் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story