கட்டிப்புரண்டு சண்டை போட்ட 2 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்


கட்டிப்புரண்டு சண்டை போட்ட 2 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்
x

கட்டிப்புரண்டு சண்டை போட்ட 2 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டிப்புரண்டு சண்டைபோட்டு உள்ளனர். இந்த விவகாரம் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். இதில், அந்த ஆசிரியர்கள் சண்டையிட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 ஆசிரியர்களும் வெவ்வேறு அரசு பள்ளிகளுக்கு பணியிடம் மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story