2 அணிகள் புதிதாக உருவாக்கம்: தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் பட்டியல் -துரைமுருகன் அறிவிப்பு


2 அணிகள் புதிதாக உருவாக்கம்: தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் பட்டியல் -துரைமுருகன் அறிவிப்பு
x

தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி, தலைமைக்கழக நிர்வாகிகளாகவும், குழு தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் இடம் பெறுவோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

அமைப்பு செயலாளர் - ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்பு செயலாளர் - அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்கள் - எஸ்.ஆஸ்டின், ப.தாயகம் கவி, தலைமைக்கழக சட்ட தலைமை ஆலோசகர் - வக்கீல் பி.வில்சன், சட்டத்துறை தலைவர் - வக்கீல் ஆர்.விடுதலை, சட்டத்துறை செயலாளர் - வக்கீல் என்.ஆர்.இளங்கோ.

சட்டத்துறை செயலாளர்கள்

சட்டத்துறை இணைச் செயலாளர்கள் - இ.பரந்தாமன், வீ.கண்ணதாசன், என்.மணிராஜ், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், அருள்மொழி. சட்டத்துறை துணை செயலாளர்கள் - ஜெ.பச்சையப்பன், கே.சந்துரு, பட்டி ஜெகன்னாதன், வி.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ்.

தலைமைக்கழக வக்கீல்கள் - ப.கணேசன், சூர்யா வெற்றிகொண்டான், கே.ஜெ.சரவணன், வீ.கவி கணேசன், எம்.எல்.ஜெகன், ஏ.என்.லிவிங்ஸ்டன், கே.மறைமலை. கொள்கை பரப்பு செயலாளர்கள் - திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன், சபாபதி மோகன். கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள் - நெல்லிக்குப்பம் புகழேந்தி, வி.சி.சந்திரகுமார்.

அலுவலக செயலாளர்கள்

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் - வேலூர் டாக்டர் விஜய், பி.ஆர்.சுந்தரம், கம்பம் இரா.பாண்டியன், குத்தாலம் அன்பழகன், கரூர் முரளி, வி.பி.ஆர்.இளம்பரிதி, ச.அ.பெருநற்கிள்ளி, குடியாத்தம் குமரன், ஆரணி வெ.அன்புவாணன், வேலூர் ரமேஷ், சேர்க்காடு கென்னடி.

தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் - துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம். தொழிலாளர் அணி செயலாளர் - பிடிசி ஜி.செல்வராஜ். தொழிலாளர் அணி துணை செயலாளர்கள் - பிடிசி வெ.பாலு, ராஜா குப்புசாமி, கொல்லாபுரம் ராஜேந்திரன்.

அமைப்புசாரா ஓட்டுநர் அணி

தி.மு.க. சட்ட திட்டத்தில், துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதி 31 பிரிவு 21-ன்படி அமைப்புசாரா ஓட்டுநர்களின் நலன் கருதி, தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி எனும் புதிய துணை அமைப்பும், விதி 31 பிரிவு 22-ன்படி தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறையை மேம்படுத்திட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்டு, அந்த அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவராக டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளராக டி.செங்குட்டுவன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர்களாக டாக்டர் முத்துராஜா, பணப்பட்டி கே.தினகரன், நாகர்கோவில் எம்.சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி.உதயசூரியன், விஷ்ணு பிரபு.

விளையாட்டு மேம்பாட்டு அணி

விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதிமாறன் எம்.பி., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர்களாக கவுதம சிகாமணி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பைந்தமிழ் பாரி, வே.நம்பி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story