குடிபோதையில் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது
குடிபோதையில் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
நெமிலி
குடிபோதையில் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பனப்பாக்கம் பேரூராட்சி, அருந்ததியர்பாளையம் பகுதியை சார்ந்தவர் மோகனசுந்தரம் (43). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (22), வசந்த் (25), பிரவின் (23) ஆகிய 3 பேரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை மோகனசுந்தரம் ஏன் குடிபோதையில் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த 3 பேரும் அவரை கோடாரியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிவலிங்கம், பிரவின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வசந்தை சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story