வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் சாவு


வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் சாவு
x

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மகன் ஜெகன் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின், செல்போன் கடையில் வேலை பார்த்துவந்தார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது சந்தை எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் செங்குளம் வடக்கூர் பகுதியை சேர்ந்த பழனி மகன் அகஸ்டீன் (22). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் செங்குளம் பகுதியில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அகஸ்டீன் உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story