2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

நன்னடத்தை பிணையை மீறிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பிநாராயணன் (வயது 22). இவர் கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை ஆவணத்தில் உள்ள நிபந்தனைகளின் படி நடந்து கொள்ளாமல் பிணை ஆணை நிபந்தனை மீறி பாளையங்கோட்டை போலீஸ் நிலைய பகுதியில் குற்ற செயலில் ஈடுபட்டார்.

இதேபோல் திம்மராஜபுரம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் மாணிக்கராஜா (26) என்பவரும் கடந்த மே மாதம் 28-ந் தேதி எழுதிக் கொடுத்த ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை ஆவணத்தில் உள்ள நிபந்தனைகளின் படி நடந்து கொள்ளாமல் பிணை ஆணை நிபந்தனை மீறி குற்ற செயல் புரிந்துள்ளார்.

நன்னடத்தை பிணை ஆணை நிபந்தனை மீறிய இவர்களை சிறையில் அடைக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷன் சீனிவாசன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story