கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் நெம்மக்கோட்டை குட்டை குளத்துக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை விடுதி கீழத்தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 36), கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (19) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story