2 எண்ணெய் நிறுவன தயாரிப்பு தற்காலிக நிறுத்தம்


2 எண்ணெய் நிறுவன தயாரிப்பு தற்காலிக நிறுத்தம்
x

2 எண்ணெய் நிறுவன தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

உணவு பாதுகாப்பு துறை

திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள 2 எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்தாண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனங்களில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் நிறுவனத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய தொடர்ந்து 6 மாதமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை மூலம் கடந்த மாதம் 6-ந் தேதி தயாரிப்பு நிறுத்தம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, 2 நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 நிறுவனத்தினரும் உத்தரவை மீறி எண்ணெய் தயாரித்ததும், உணவு பாதுகாப்பு துறையின் லேபில்லிங் மற்றும் தயாரிப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

4,500 லிட்டர் சமையல் எண்ணெய்

இதைத்தொடர்ந்து 2 எண்ணெய் நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அதில் 2 நிறுவனங்களும் முறையான உரிமம் இல்லாமலும், தயாரிப்பு இடங்களில் அசுத்தங்கள், மண் கழிவுகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவசர தடையாணை அறிவிப்பு மூலமாக 2 நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைைய தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் 2 நிறுவனங்களில் இருந்து 4,500 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story