செம்மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்
செம்மண் கடத்திய 2 டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி
கருங்கல்:
கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் கம்பிளார் பொதுவன்விளையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டெம்போக்களை தடுத்து நிறுத்தினர். உடனே டெம்போக்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் இறங்கி தப்பி ஓடினர். தொடர்ந்து அவற்றை சோதனை செய்த போது செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக டெம்போக்களின் டிரைவர்கள் தொலையாவட்டம் செம்முதலை சேர்ந்த ஜெபின் (34), பரப்புவிளையை சேர்ந்த ராபி (45) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story