திருச்சியில் 2 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சியில் 2 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சியில் 2 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நேற்று திருவானைக்காவல் அருகே உள்ள புதிய அண்ணாநகர் தாகூர்தெருவில் உள்ள அரிசிஆலையில் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2,700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த திருவளர்ச்சோலையை சேர்ந்த ராஜா என்பவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story