அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

சீர்காழியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story