அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம், பிப்.20-

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 158 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

1 More update

Next Story