2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அரபாண்டகுப்பம் சுடுகாடு அருகே உள்ள தென்னதோப்பில் கேட்பாரற்று நிலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சுடுகாடு பகுதியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story