சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சேலத்தில்   2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சேலம்,

கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று இரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி, சோதனை செய்தனர். வேனில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. மேலும் அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொண்டலாம்பட்டி பாப்பாத்தி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 45), பூலாவரியை சேர்ந்த குமார் (35) என்பதும், 2 பேரும் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story