2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உவரியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு உவரி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள தரிசு நிலத்தில் தார்பாய் போட்டு மூடப்பட்டு இருந்ததை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ எடை கொண்ட 54 மூட்டைகளில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கொண்டு செல்ல பதுக்கிவைத்து இருப்பது தெரியவந்தது.
சுமார் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக உவரியை சேர்ந்த அண்டன் மனைவி அன்சி (வயது 40) என்பவர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story