காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

புதுக்கடை அருகே காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர ரோந்து

குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடற்கரையையொட்டி உள்ள கிராமங்களில் இருந்து புதுக்கடை வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

2 டன் ரேஷன் அரிசி...

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கடை போலீசார் புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். டிரைவர் போலீசாரை கண்டதும் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பியோட்டி விட்டார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் காருடன் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ேபாலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், அவற்றை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story