சொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

குலசேகரத்தில் சொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரத்தில் சொகுசு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவிற்கு நேற்று மதியம் குலசேகரம் வழியாக ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் குலசேகரம் அரசமூடு சந்திப்பு அருகே ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

2 டன் ரேஷன் அரிசி

அப்போது அந்த வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அரிசியுடன் அந்தக் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் பூதப்பாண்டி காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23) என்பவரையும் பிடித்தனர். பின்னர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் டெம்போ மற்றும் டிரைவர் அஜித்தை ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த அரிசியை பூதப்பாண்டி பகுதியில் இருந்து கேரள மாநிலம் பனச்சமூட்டிற்கு கொண்டு ெசன்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து டிரைவர் அஜித் கைது செய்யப்பட்டார்.


Next Story