2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்


2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

வெப்படை அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

2 டன் புகையிலை பொருட்கள்

பள்ளிபாளையம் வெப்படை அருகே ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி நேற்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகியோர் சின்னார்பாளையம் அருகே அங்கு பதுக்கி வைத்து இருந்த வீட்டுக்கு சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மூட்டையாக மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

இது தொடர்பாக வெப்படை போலீசார் விசாரணை செய்தனர். வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story