சுங்கச்சாவடியில் 2 லாரிகள் திடீர் மோதல்; வசூல் பணியில் இருந்த ஊழியர் படுகாயம்

சுங்கச்சாவடியில் 2 லாரிகள் திடீர் மோதல்;   வசூல் பணியில் இருந்த ஊழியர் படுகாயம்
x

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூலுக்கு நின்ற 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்ெகாண்டன. இதில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூலுக்கு நின்ற 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்ெகாண்டன. இதில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கப்பலூர் சுங்கச்சாவடி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.

நேற்று அதிகாலை மதுரையில் இருந்து காய்கறிகளை ஏற்றுக்கொண்டு சிவகாசி நோக்கி கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கப்பலூர் சுங்கச்சாவடி வசூல் மையத்திற்குள் நுழைந்தது.

அப்போது லாரியின் முன்புறம் ஒட்டப்பட்டிருந்த 'பாஸ்ட் டிராக்' ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி ஊழியர் படுகாயம்

இதனால் பணியில் இருந்த திருமங்கலம் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற ஊழியர், அந்த லாரிக்கான கட்டணத்தை வசூலிக்க தான்வைத்திருந்த ஸ்கேன் கருவி மூலம் லாரியில் ஒட்டப்பட்டு இருந்த பாஸ்ட் டிராக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த காய்கறி லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரி அதன் மீது மோதியது. இதனால் காய்கறி லாரி கண்இமைக்கும் நேரத்தில் நகர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுங்கச்சாவடியில் நடந்த இந்த விபத்து காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story