சரள்மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்


சரள்மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
x

சரள்மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நெல்லை- தூத்துக்குடி ரோட்டில் சரள் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி டிரைவர்களான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த சங்கரபாண்டி மகன் சிதம்பரம் (வயது 21), சீவலப்பேரி உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புகுட்டி மகன் ஆறுமுகம் (36) மற்றும் லாரி உரிமையாளரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 6 யூனிட் சரள் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story