மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல்


மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல்
x

ஆற்காடு அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே புதுப்பாடி அண்ணா நகர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 2 வேன்களில் மணல் கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து 2 வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story