கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சம்மத்தித்த 2 கிராம மக்கள்


கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சம்மத்தித்த 2 கிராம மக்கள்
x
தினத்தந்தி 1 Feb 2023 7:00 PM GMT (Updated: 1 Feb 2023 7:00 PM GMT)

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த ௨ கிராம மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.

திண்டுக்கல்


நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவில் 2 கிராம மக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் இருதரப்பு மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

கரியாம்பட்டியில் உள்ள காளியம்மன், மகா கணபதி, பகவதியம்மன், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கான கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் கும்பாபிஷேக விழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் கரியாம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந்தேதி வரை கும்பாபிஷேக விழாவை 2 கிராம மக்களும் இணைந்து நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்தது.


Next Story