மணிபர்சை திருடிய 2 பெண்கள் கைது


மணிபர்சை திருடிய 2 பெண்கள் கைது
x

மணிபர்சை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை திருவையாறு செல்வதற்காக திருமானூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரது அருகே நின்று கொண்டிருந்த 2 பெண்கள் திடீரென ராஜேஸ்வரி மணிபர்சை பிடுங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பெண்களையும் மடக்கி பிடித்து திருமனூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த நந்தினி (31), மங்கா (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story