பால் பண்ணை ஊழியர் மனைவி உள்பட 2 பெண்கள் மாயம்


பால் பண்ணை ஊழியர் மனைவி உள்பட 2 பெண்கள் மாயம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பால் பண்ணை ஊழியர் மனைவி உள்பட 2 பெண்கள் மாயம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே எலவடி கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் சோலைமுத்து மகன் சதீஷ்குமார்(வயது 36). இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும் குழலினி(4), சதிக்க்ஷா(2) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சதீஷ்குமார் சின்னசேலம் அடுத்த வி.கூட்டுரோடு பால் பண்ணையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது 2 குழந்தைகளுடன் புவனேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடியும் காணாததால் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதபோல் சின்னசேலம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி மகன் குணசேகரன்(வயது 30). இவருக்கும், வளர்மதி(25) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லோகஸ்ரீ(9), சிவஸ்ரீ(7), ஸ்ரீரித்(5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வளர்மதி திடீரென மாயமானார். இதில் அதிா்ச்சி அடைந்த குணசேகரன், வளர்மதியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து குணசேகரன் சின்னசேலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்மதியை தேடி வருகின்றனர்.


Next Story