கார் மோதி 2 பெண்கள் காயம்


கார் மோதி 2 பெண்கள் காயம்
x

கார் மோதி 2 பெண்கள் காயமடைந்தனர்.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகம் எதிரில் சாலையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த மேரி மற்றும் மற்றொரு பெண் மீது மோதியது. தொடர்ந்து ஓடிய கார் அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியதை தொடர்ந்து, சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதில் மேரிக்கு கால் எலும்பு முறிந்தது. மற்றொரு பெண் காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கிளியநல்லூரைச் சேர்ந்த ரமேசை(34) பொதுமக்கள் தாக்க முற்பட்ட நிலையில், போலீசார் அவரை மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story