வேன் மோதி 2 பெண்கள் சாவு
சாலை தடுப்பு சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்த போது வேன் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
சாலை தடுப்பு சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்த போது வேன் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
வேன் மோதியது
பொள்ளாச்சி பல்லடம் நான்கு வழிச் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர்களில் இருந்த பெயிண்ட் அழிந்து விட்டது. எனவே அங்கு பெயிண்ட் அடித்தல், செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி புளியம்பட்டியில் சாலை தடுப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேன் எதிர்பாராதவிதமாக தொழி லாளர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீது மோதிய வேகத்தில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
2 பெண்கள் சாவு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.
இதில், படுகாயமடைந்தது அங்கலகுறிச்சியை சேர்ந்த மயிலாத்தாள் (வயது 55), ஈஸ்வரி (50), லட்சுமி (45), சரஸ்வதி (60) என்பது தெரியவந்தது.
பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு ஈஸ்வரி, மயிலாத்தாள், சரஸ்வதி, ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் மயிலாத்தாள், ஈஸ்வரி ஆகியோர் கோவைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தை சேர்ந்த விஜய் (24) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பல்லடம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.