தனியார் நிறுவன ஊழியருக்கு 2½ ஆண்டு சிறை


தனியார் நிறுவன ஊழியருக்கு 2½ ஆண்டு சிறை
x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்

கோயம்புத்தூர்


கோவையை அடுத்த அன்னூர் அருகே செல்லனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தனியார் கேபிள் டி.வி. நிறுவன ஊழியர். இவர், அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கேபிள் டி.வி. இணைப்பை சரி செய்ய சென்றார்.

அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி மட்டும் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்திய சரவணன், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார்.

இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு 2½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story