டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
x

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

திருவாரூர்

மன்னார்குடி

மன்னார்குடி குன்னோஜி ராஜாம்பாளையம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). விவசாயி. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இவர் மன்னார்குடி தேரடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன் சைக்கிளில் மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியானார். இதுகுறித்த வழக்கு மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி அமிர்தீன், கவனக்குறைவாக வேனை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி கோவிந்தராஜ் சாவுக்கு காரணமாக இருந்த வேன் டிரைவர் மதுக்கூரை அடுத்த படப்பைகாடு பகுதியை சேர்ந்த குமார் என்கிற குமரேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story