முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை


முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது72). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி, சந்து பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி முனுசாமி குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாசலத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story