கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

தஞ்சை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூர்


தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 24), காந்திபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story