பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x

காங்கேயநல்லூரில் பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

காங்கேயநல்லூர் மடம் தெருவில் வசிப்பவர் கருணாகரன். இவரது மனைவி மணிமேகலை (வயது 35). இவர் கடந்த 17-ந் தேதி அதே பகுதியில் தனக்கு தெரிந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சூர்யா என்ற பப்லு, மதியழகன் என்ற லோகேஷ் ஆகிய இருவரும் மணிமேகலையை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மணிமேகலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து மணிமேகலை விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் லெனின், மோகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மது போதையில் பெண்ணை தாக்கியதாக சூர்யா, மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story