கடையை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது


கடையை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது
x

கடையை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தூசி

கடையை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் ஆக்கூர் கூட்டு ரோட்டில் பங்க் கடை வைத்துள்ளார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடை முன்பு இருந்த இரும்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்று கடையில் வைத்திருந்த பொருட்கள் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் கோபால்சாமி(வயது 19), ஏழுமலை மகன் தேவராஜ்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story