பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது


பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்

திண்டிவனம்

ரோசனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தீவனூர் கூட்டுரோட்டில் தடியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி தொல்லை கொடுத்த தீவனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் பிரவின்(வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அகூர்கிராமம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் உதயகுமார்(36) என்பவரை வெள்ளிமேடு பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி கைது செய்தார்.


Next Story