சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்த 2 வாலிபர்கள் கைது


சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்த 2 வாலிபர்கள் கைது
x

சொத்து தகராறில் பெரியப்பாவை வெட்டி கொலை செய்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

விவசாயி கொலை

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 63), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணியை அவரது ஆட்டு கொட்டகை முன்பு மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இது குறித்து அவரது 2-வது மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இதில் கொலை செய்யபட்ட மணியின் தம்பியான கணேசன் என்பவருக்கு சரிவர சொத்து பிரித்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசனின் மகன்கள் அருண்குமார் (29), மோகன்ராஜ் (27) ஆகியோர் மணியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story