கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் நத்தமேடு நரிக்குறவர் காலனி அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் அருகே உள்ள கோபாலபுரம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த சுள்ளான் என்கிற சூர்யா(வயது 20), திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரதீப்குமார்(25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 10 கிராம் எடையுள்ள 2 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story