சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடத்தல்
அரியலூர் மீன்சுருட்டி அருகே உள்ள குட்டக்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை எனக்கூறி அவரது ெபற்றோர் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை மேற்கொண்டதில் காட்டகரம் காலனி தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் குணால்(வயது 21) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் இருந்தவர்களை மீட்டு அழைத்து வந்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் குணால் மீது அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து குணாலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கர்ப்பம்
இதேபோல் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூரை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து தத்தனூர் பொட்டக்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த மதியழகன் மகன் நாவரசு(20) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாவரசுக்கு முன்பே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி 45 நாட்களே ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.