கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் அதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (19) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story