கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

சோளிங்கர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதரில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 20), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜித் (26) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story