கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி பழைய அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷேக் அப்துல்லாவை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற திருத்துறைப்பூண்டி வ.உ.சி. நகரை சேர்ந்த வெங்கடேசன்(25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.