கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-வந்தவாசி செல்லும் சாலையில் கோழிப்புலியூர் கூட்ரோட்டில் கஞ்சா விற்பதாக தேசூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கோழிப்புலியூர் கூட்ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், செய்யாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் அரவிந்தன் (வயது 20), செய்யாறு கொடாநகரை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (20) என்பதும், விற்பனைக்காக 1½ கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story